புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வுவுச்சர் ஊழிநர்களாக பணிபுரிந்து வரும் ஊழியர்களான எங்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும், முதலமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த 18, 000 ரூபாய் வழங்க வேண்டும், மேலும் எங்களுடன் பணிபுரிந்த புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒர்க்கர்ஸ் வெல்ஃபர் அசோசியனை சேர்ந்த விடுபட்ட 119 ஊழியர்களை வவுச்சர் ஊழியர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக பணிகளை புறக்கணித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.