புதுச்சேரியில் ஆன்லைனில் 5 பேரிடம் ரூ. 1. 80 லட்சம் மோசடி

69பார்த்தது
புதுச்சேரி தொண்டமாநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறினார். இதைத் தொடர்ந்து மீனாட்சிசுந்தரத்திற்கு ஆன்லைன் மூலமாக கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருமானம் ஈட்டினார். தொடர்ந்து அவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து மீனாட்சிசுந்தரம் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தார். பின்னர் அந்த தொகையை எடுக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதே போல் முத்தியால்பேட்டை சுல்தான் மைதீன் என்பவரிடம் ரூ. 22 ஆயிரத்து 779-ம், முதலியார்பேட்டை தேவன் என்பவரிடம் ரூ. 21 ஆயிரமும். முதலியார்பேட்டை தமிழரசியிடம் ரூ. 30 ஆயிரத்து 435-ம், லாஸ்பேட்டை லோகநாதனிடம் ரூ. 5 ஆயிரமும் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 பேரிடம் ரூ. 1 லட் சத்து 80 ஆயிரத்து 214 மோசடி நடந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி