நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது அவர், "அண்ணன் ராம்குமார் வாங்கிய ரூ.3 கோடி கடனை திரும்ப செலுத்த தம்பியான பிரபு உதவலாமே?" என்று கேட்டுள்ளார். அதற்கு, "அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனை திரும்ப செலுத்த என்னால் உதவ முடியாது. அன்னை இல்லம் வீட்டின் மீது எனது அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை" என நடிகர் பிரபுவின் தரப்பு பதிலளித்துள்ளது.