புதுச்சேரியை சேர்ந்த பிரதீஸ் என்பவர் கொலை வழக்கில் தண்டனை கைதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பிரதீஸ் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் பிரதீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.