புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம்

82பார்த்தது
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம்
புதுச்சேரியில் தேசிய ஜனநாக கூட்டணியில் பாஜக வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஏம்பலம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் துணை நபாநாயகர் ராஜவேலு, தொகுதி எம்.எல்.ஏ லஷ்மிகாந்தன் இருந்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமைய போகிறது. மோடி தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிந்த பிறகு அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு இலவச அரிசி மட்டுமல்லாது ரேஷன் பொருட்களும் வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி