நாங்கள் நினைத்திருந்தால் மோடி இந்நேரம் சிறையில்..

23910பார்த்தது
நாங்கள் நினைத்திருந்தால் மோடி இந்நேரம் சிறையில்..
சிவகங்கையில் நேற்று (ஏப்ரல் 14) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதல்வர்களை கைது செய்துவிட்டு தேர்தல் நடத்தலாம் என்று எங்களுக்கு அப்போது தோன்றவில்லை. 2014 ஆம் ஆண்டு மட்டும் எங்களுக்கு அப்படி தோன்றியிருந்தால் மோடியை நாங்கள் கைது செய்து சிறையில் அடைத்திருப்போம். இந்நேரம் அவர் சிறையில் இருந்து இருப்பார்.ஆனால் காங்கிரஸ் கட்சி அதை செய்ய விரும்பவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி