தேர்தல்களில் டம்மி வேட்பாளர்கள் வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு!

76பார்த்தது
தேர்தல்களில் டம்மி வேட்பாளர்கள் வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு!
தேர்தல்களில் டம்மி வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்களில் போட்டியிடும் முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்களில் இருப்பவர்கள் டம்மி வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர். இது சுதந்திரமான வெளிப்படையான தேர்தல் நடைமுறையை பாதிக்கிறது எனவே இதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் இருக்கிறது அதற்காக அவர் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி