ரூ.4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

30961பார்த்தது
ரூ.4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற விரைவு ரயிலில் 4 கோடி ரூபாயை, கடந்த 6ஆம் தேதி தேர்தல் பறக்கும் படை கைப்பற்றிய நிலையில் இது தொடர்பில் நெல்லை எம்எல்ஏவும், பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க தாம்பரம் காவல்நிலையத்தினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரின் மைத்துனர் துரையிடம் தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை வழங்கினார்.

அதே போல் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி