நீலகிரியில் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை

74பார்த்தது
நீலகிரியில் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி மக்களவை தேர்தலுக்கான தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணமோ, பரிசுப் பொருட்களோ எதுவும் சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி