உலகு தாங்காது நிறுத்துங்கள் போரை - வைரமுத்து கண்டனம்

75பார்த்தது
உலகு தாங்காது நிறுத்துங்கள் போரை - வைரமுத்து கண்டனம்
இஸ்ரேல், ஹமாஸ் போர் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன. உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது. நிறுத்துங்கள் போரை, ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான போரானது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி, இன்று வரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி