வெயில் தாக்கத்தால் மயங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

63பார்த்தது
வெயில் தாக்கத்தால் மயங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள வையமலைப்பாளையம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். கடும் வெயிலை பொருட்படுத்தத்தாது திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். வெயிலால் சோர்வடைந்த வேட்பாளர் ஜோதிமணி ஓந்தாம்பட்டி கிராமத்துக்கு வந்த போது அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு ஆரத்தியுடன் காத்திருந்த பெண்களுடன் பேசியவாறு சென்ற நிலையில் மயக்கமடைந்தார்.

பின்னர் ஜோதிமணி அப்படியே தரையில் அமர்ந்தார். கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து அவருக்கு பதிலாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி