தஞ்சாவூர் மாவட்டம் களஞ்சேரியில் ஸ்ரீவேத வித்யா குருகுலத்தை நடத்தி வரும் சீதாராமன் என்பவர் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பேசி ஆடியோ வெளியிட்டார்.
அவர் நடைபயிற்சி சென்ற போது 2 பேர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர். சீதாராமனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடயில், பாதிக்கப்பட்டவர் தரப்பில் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.