மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

58பார்த்தது
மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி