UPSC தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கெட்கரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில், "பூஜா கெட்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன் ஜாமின் வழங்க வேண்டும் அல்லது ஏன் வழங்கக்கூடாது? என்பதற்கு சரியான பதில் இல்லை. இந்நிலையில், மனுதாரரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை" என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.