திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.