"பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு கூடாது"

70பார்த்தது
"பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு கூடாது"
ஊழல் முறைகேட்டில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டிக்க கூடாது என தொழிலாளர் சங்கத்தினர் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். 500 பக்கங்கள் கொண்ட மனுவில், "இம்மாத இறுதியில் பணிநிறைவு செய்ய உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணிநீட்டிப்பு செய்ய தீவிர முயற்சி நடந்து வருகிறது. பெரியார் பல்கலை.யில் ஊழல் நடந்தது உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது . 2021-ல் துணைவேந்தராக பதவியேற்ற ஜெகநாதன் பதவியேற்றது முதல் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார்" என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி