பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட ரோல்பால் பெடரேசன் சார்பில் 11 வயதிற்குட்பட்டோருக்கான மினி ஸ்கேட்டிங் ரோல்பால் பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்றும், இன்றும் நடைபெற்றது. தென்னிந்திய அளவில் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணிகளும் பெண்கள் பிரிவில் 5 அணிகளும் என தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில் 10 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி கேரளா அணியை வென்றது. அதே போல பெண்கள் பிரிவில் 7 புள்ளிகள் பெற்று தமிழக அணி ஆந்திர அணியை வென்றது. அந்த வகையில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பெற்றது. ஆண்கள் பிரிவில் கேரள அணி இரண்டாவது இடத்தையும், அந்தமான் அணி மூன்றாவது இடத்தையும் பெற்றது. பெண்கள் பிரிவில் ஆந்திரா அணி இரண்டாவது இடத்தையும், கேரளா அணி மூன்றாவது இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ரோல் பால் அசோசியேசன் தலைவர் செல்வராஜ், செயலர் சரவணன் மற்றும் பயிற்சியாளர்கள் ஆனந்த், முரசொலி மாறன், பூமிநாதன், கிஷோர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.