நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்... பதற வைக்கும் வீடியோ

61பார்த்தது
கேரள மாநிலத்தின் கண்ணூர் கல்லேரிமலையில் நேற்று (டிச. 02) கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் அங்கு சாலையில் சென்ற இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 34 பயணிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் ஈரமான சாலை காரணமாக விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி