கேரளாவின் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் 5 பேர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனர். நேற்று (டிச., 02) இரவு இவர்கள் சென்ற கார், பேருந்து மீது அதி பயங்கரமாக மோதியது. இதில், ஆயுஷ் ஷாஜி (19), ஸ்ரீதீப் வத்சன் (19), தேவானந்தன் (19), முகமது அப்துல் (19), முகமது இப்ராகிம் (19) ஆகியோர் உயிரிழந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.