குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த தீபிகா படேல் (34) பாஜக மகளிர் அணி தலைவியாக இருந்தார். அவருக்கு கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் (டிச. 01) அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் சிராக் சோலங்கி என்பவருடன் தீபிகா நட்பாக இருந்திருக்கிறார். இறப்பதற்கு முன் அவரிடம் பேசிய தீபிகா, தான் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. போலீசார் சிராக்கிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.