கர்நாடகா: உத்தர கன்னடா மாவட்டத்தில் நவீன் நாராயண் (13) என்ற சிறுவன் தொண்டையில் பலூன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு வீட்டில் பலூனை ஊதிக் கொண்டிருந்தபோது, அது வெடித்து அவரது சுவாசப்பாதையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.