'பிளீடிங் ஐ' வைரஸ் என்று அழைக்கப்படும் மார்பர்க் வைரஸின் கொடிய நோய் ருவாண்டாவில் பதிவாகியுள்ளது. இதில் 15 பேர் பலியான நிலையில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பல ஆப்பிரிக்க நாடுகளில் Mpox, Oropouche காய்ச்சல் உட்பட, கொடிய நோய்த்தொற்றுகளின் அங்கமாக உள்ளது. இறப்பு விகிதம் 88% வரை இருக்கும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.