தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தினேஷ் - மோனா தம்பதி கடந்த சனிக்கிழமை (நவ.30) இரவு பைக்கில் சென்று கொண்டிருந்த போது மது போதையில் கார் ஓட்டி வந்த பிரணய் (23) அவர்கள் பைக் மற்றும் மேலும் சில வாகனங்கள் மீது மோதினார். இதில் தினேஷ் மற்றும் அவரின் கர்ப்பிணி மனைவி மோனா உயிரிழந்தனர். சம்பவத்தில் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பிரணய் நேற்று (டிச. 02) கைது செய்யப்பட்டார்.