பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (26. 07. 2024) நடைபெற்றது.
முன்னதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டத்தைப் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எங்கு விண்ணப்பிக்க வேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த முழு விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சார் ஆட்சியர் கோகுல் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் பாண்டியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே) ராணி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.