'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இதனிடையே சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. இந்நிலையில், 'டீசல்' படத்தில் 'பீர் சாங்' பாடல் தற்பொழுது யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது.