ஓம் பிர்லாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

80பார்த்தது
ஓம் பிர்லாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
மக்களவை சபாநாயகராக குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 2வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வான உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மக்களவையின் கண்ணியத்தை தொடர்ந்து காப்பீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி