காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

59பார்த்தது
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி நீடிப்பார் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவரே மேயராக நீடிப்பார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எந்த மாமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளாத நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது" என தெரிவித்தார். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பேருந்து மூலம் உதகைக்கு நேற்று மாலை சுற்றுலா சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.