இந்தியா வந்த ரஷ்ய பெண் ஒருவர், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.100 தர வேண்டும் என்று தனது கையில் ஒரு பேப்பரைக் காட்ட, அவருக்கு பணம் கொடுத்து பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண் கூறுகையில், “எல்லோரும் என்னிடம் வந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வதாக கூறுகின்றனர். இது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு வழி என்னிடம் உள்ளது” என கூறுகிறார். பின்னர், செல்ஃபி எடுக்க ரூ.100 கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.