கோவை: காவலர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (16.11.2024) கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்காக தனியார் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை துவங்கி வைத்தார். இன்று நடைபெற்ற முகாமில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். மேலும் வரும் நாட்களில் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.