சிங்காநல்லூர் - Singanallur

காரமடை: கவுன்சிலர் மரங்களை வெட்டியதாக புகார்!

காரமடை: கவுன்சிலர் மரங்களை வெட்டியதாக புகார்!

காரமடை நகராட்சியின் மூன்றாவது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் முறைகேடாக மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தியதில் காரமடை நகராட்சி மூன்றாவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் எஸ். எம் ரவிக்குமார் தனது சுய லாபத்திற்காக பழமையான மரங்களை வெட்டி அகற்றியதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் அமைக்க சாலை ஓரத்தில் இருந்து பெரிய பெரிய வேம்பு மரங்களை வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் ஐந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதுடன் வெட்டிய மரங்களையும் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளார். அது குறித்த அந்தப் பகுதி பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து தற்போது மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மீது வருவாய் ஆய்வாளர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பீட்டை கணக்கிட்டு மூன்று மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் எனவும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా