உதகையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
மத்தியஅரசை கண்டித்து நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கொட்டும் மழையில் உதகையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து உதகையில் உள்ள ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா. மு முபாரக் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் முன்னிலையில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொடையைப் பிடித்தவாரு , மழையில் நினைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, கே எம் ராஜு, காசிலிங்கம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி