தாய்லாந்து: காதலன் கண்முன்னே காதலி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளான்கா (22) என்ற ஸ்பெயினை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். யானைகள் முகாமிற்கு சென்ற ப்ளாங்கோ, யானையுடன் குளித்துக்கொண்டே அதனை குளிப்பாட்டியுள்ளார். அப்போது, யானை ஒன்று அவரை தந்தத்தால் தூக்கி வீசி, நசுக்கி கொன்றுள்ளது. ப்ளாங்கோ அவரது காதலன் கண்முன்னே துடிதுடித்து இறந்துள்ளார்.