கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று (ஜன. 06) உத்தரவிட்டது. கைதானவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலையில், இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.