ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன்னர், பெண் கழுகு நிலத்திற்கு சென்று சிறிய குச்சி ஒன்றை எடுத்து பின் மேலே பறந்து அந்த குச்சியை கீழே போட்டு காத்திருக்கும். அந்த குச்சியை நிலத்தில் விழும் முன் பிடித்து அதை உயர பறக்கும் பெண் கழுகிடம் ஆண் கழுகு சேர்க்கும். இவ்வாறு பல மணி நேர பரீட்சை நடத்திய பின்னர் ஆண் கழுகிடம் இருக்கும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அதனுடன் உறவு கொள்ள பெண் கழுகு ஒப்புக்கொள்ளும்.