அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம். மிளகிற்கு பதிலாக சோம்பு போட்டு வைக்கலாம். ஆனால் ஒருபோதும் உப்பு மட்டும் வைக்கக்கூடாது. மற்ற மசாலாவுடன் உப்பு சேர்த்து வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் உப்புக்கு வாசனையை ஈர்க்கும் தன்மை இருப்பதால் மற்ற மசாலாக்களின் வாசனையும், நறுமணமும் போய்விடும். மேலும் வேதிவினை காரணமாக உப்பின் தன்மையும் மாறிவிடும்.