இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் காமராஜரால் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் விரிவுபடுத்தப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை துவங்கியிருக்கிறார். இந்த மதிய உணவு திட்டத்தை தற்போது இந்தோனேஷியாவும் பின்பற்றியுள்ளது. 8.3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.