இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (ஜன. 07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது “இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி வருகிறது. தற்போது வரையில் எண்ணிக்கையானது 99 கோடியை தாண்டியுள்ளது. இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தல் நேரத்தில் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.