முட்டை மிதக்கும் முறையை வைத்தே அது நல்லதா? இல்லை கெட்டு போய்விட்டதா என்பதை எளிதாக கண்டறியலாம். ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் முட்டையை போட வேண்டும். முட்டை கிடைமட்டமாக அடியில் தங்கினால் அது நல்ல முட்டையாகும். முட்டை கொஞ்சம் பழையதாக இருந்தால் அடிப்பகுதி கீழ்புறமாகவும், மேல்பகுதி மேற்புறம் நோக்கியும் இருக்கும். கெட்டுப் போன முட்டையாக இருந்தால் முட்டை மேலே மிதக்கத் துவங்கும்.