நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

60பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ நான்கு மணி நேரம் போராடி தீயணைப்புத் தீயை அணைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு வேளையில் கடும் குளிர் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள இடங்களில் அவ்வப்போது உள்ள புல் மற்றும் காட்டுச் செடிகள் காய்ந்துள்ளதால் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்கும் முன்னரே மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறி உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குன்னூர் அருகே உள்ள கம்பிச் சோலை பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் பல ஏக்கர் பரப்பளவில் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் போராடி இலை, செடிகளை வைத்தும் , தண்ணீர் பாய்ச்சியும் காட்டு தீ விபத்தை கட்டுப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி