பிரபல தனியார் ஓட்டலுக்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகம்

83பார்த்தது
உதகை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி உதகை நகராட்சிக்கு ரூபாய் 27 லட்சத்து 33 ஆயிரத்து 892  வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர் – சுகாதார ஆய்வாளர் – நகராட்சி மேற்பார்வையாளர்கள் தனியார் தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் இருப்பவர்களிடம் வரி வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் தனிக்குழு அமைத்து  வரி செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் வரி நிலுவை அதிகம் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வரி வசூல் செய்து வருகின்றன.

இந்நிலையில் உதகை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி உதகை நகராட்சிக்கு ரூபாய் 27 லட்சத்து 33 ஆயிரத்து 892  வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதற்கு சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி