உதகையில் சாலை மறியலில்  ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு

75பார்த்தது
பொது மக்களுக்கு  குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள மதுவானா என்னுமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தாவரவியல் பூங்கா அருகே உள்ளதால் இங்கு உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகமாக உள்ளன.

இந்த நிலையில் இங்கு உள்ள தனியார் உணவு விடுதிக்கு இரண்டு இன்ச் அளவு கொண்ட குடிநீர் குழாய் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் சாலையை தோண்டி பதித்துள்ளனர். இந்த குழாய் பதிந்துள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயலால் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை இருக்கும் தங்கள் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி