உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் பணி நியமன ஆணையை அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் வழங்கினார்.
உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் மேம்பாடு திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பின் முகாமில்120-கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுபல்வேறு காலி பணியிடங்களை அறிவித்து தகுதியான நபர்களை நேரடியாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
தனியார் துறையில் பணிக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கினார் இவிழாவில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.