நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மாஸ்டர் பிளான் தடைச்சட்டத்தை மீறி, குன்னூர் அருகே கரிமரஹட்டி பகுதியில் வடமாநில தொழிலதிபர் ஒருவர் 20,000 சதுர அடியில் கட்டியிருந்த சொகுசு பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அங்கு ஆடம்பர பங்களாக்கள் கட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபகாலமாக, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் பல ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி, அங்கு ஆடம்பர பங்களாக்கள் கட்டி வருகின்றனர். இதற்கு உள்ளாட்சி அமைப்புகளும், ஒரு சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்குட்பட்ட கரிமரஹட்டி பகுதியில் வடமாநில தொழிலதிபர் ஒருவர் விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஏற்கனவே மூன்று முறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் உதவியுடன் நேற்று அந்த சொகுசு பங்களாவுக்கு சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்று விதிமீறி கட்டப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பங்களாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்