உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்

70பார்த்தது
கோத்தகிரி கெங்கரை கோவில்மட்டம் பகுதியில் உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் போன்ற சமவெளி பகுதிகளில் நிலவும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காட்டு யானைகளுக்கு தண்ணீர் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் மலை மாவட்டமான நீலகிரிக்கு யானைகள் படையெடுத்து வருகின்றன குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் யானைகள் அதிகமாக வருகின்ற இந்த நிலையில் நேற்று இரவு  கெங்கரை கோவில் மட்டம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள்  உலா வந்தன இதனை கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர் சாலையில்  நடந்து வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது  யானைகளின் பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் ஒலி எழுப்பினால் யானைகள் ஆக்ரோஷமடையுமோ என அச்சத்தோடு  யானைகள் முன்னே செல்லும்போது பின்னே வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்  எனவே வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வேறு அடர்ந்தவன பகுதியில் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி