சாலையில் கழிவு நீர் திறந்து விடப்படுவதாக கூறி நகர மன்ற உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் நீலகிரி மாவட்டம் உதகை 28வது வார்டு பர்ன்ஹில் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் ரிசார்ட் என்ற நட்சத்திர விடுதியில் இருந்து இரவு நேரங்களில் கழிவு நீரை சாலையில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் தனலட்சுமி ஜெயராமன் தலைமையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும், இதை கண்டித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பரபரப்பு ஏற்பட்டுள்ள இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.