தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். எந்த மாற்றமும் கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள். மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.