தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, "2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி கடந்த தேர்தலை விட பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி 5 சதவீத வாக்குகள் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றன" என்று கூறியுள்ளார்.