லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயாவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மூத்த மகள் கூறியதாவது, "அப்பாவின் காலில் ரத்தவோட்டம் சரியில்லாததனாலும், சர்க்கரை நோயினாலும் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது இடது காலை எடுத்துள்ளார்கள்" என்று கூறியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிரிக்கோ உதயாவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் பலர் நேரில் சென்று சந்தித்து தேவையான உதவிகளை செய்துள்ளனர்.