பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்பா... அப்பா... என்று கதறுவது முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். வேலூரில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் உரையாற்றிய இபிஎஸ், "தமிழகத்தில் ஜனவரி முதல் பிப்.14ம் தேதி வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 56 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக வழக்குப் பதிவாகியுள்ளன" என்று கூறியுள்ளார்.