தேசிய விருது வெல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருப்பதாக சாய்பல்லவி கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எனக்கு தேசிய விருது வெல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. ஏனென்றால், எனக்கு 21வயது இருக்கும்போது என் பாட்டி என்னிடம் ஒரு புடவையை தந்து, அதை என் திருமணத்தில் உடுத்த சொன்னார். எனக்கு 23-24 வயது ஆகும்போது 'பிரேமம்' படத்தில் நடித்தேன். அப்போது பெரிய விருதான தேசிய விருது வெல்வேன் என்றும் அதை வென்று அந்த புடவையை அணியலாம் என்றும் நினைத்தேன். அந்த புடவையை அணியும் வரை எனக்கு அந்த அழுத்தம் இருக்கும்' என்றார்.